'யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை' நூல் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ். போதனா மருத்துவமனை சத்திர சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சி. ராஜேந்திரா எழுதிய 'யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை' என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா கலந்து கொண்டார்.

நூலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி வெளியிட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ். ஶ்ரீதரன், வடக்கு மகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், யாழ். போதனா மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் வி. சுதர்சன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவர் இ. சுரேந்திரகுமாரன், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான மருத்துவர் எஸ். ரவிராஜ், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் போதனா வைத்திய சாலையைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

'யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை' நூல் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்