மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (24.10.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வவுனியாவில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

லக்ஷ்மி கிருஷ்ணபிள்ளை (வயது 76) என்பவரே உயிழரிழந்தவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எஸ் தில்லைநாதன்

வவுனியா மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 24.10.2021 அன்று 35 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்

பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்

முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலையில் ஒருவர்

வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்

யாழ்.மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் 04 பேர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்

என தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (24.10.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்