பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு –  Dr ஆ.கேதீஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு –  Dr ஆ.கேதீஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Dr ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் தொடர்பிலான அறிவித்தல் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியை ஒரு தடவை மட்டும் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

முதலில் 19 வயதுடைய மாணவர்களுக்கும் அதன் பின்னர் 18 வயதுஎன்ற அடிப்படையில் 17, 16, 15 வயதுகள் என்ற ரீதியில் கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் ஊடாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

குறித்த வயதுகளையுடைய பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்கள் தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள முடியும் என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு –  Dr ஆ.கேதீஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்