அச்சங்குளம் கிராமத்தில்  குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு எனும் கொள்கை பிரகடனத்துக்கு அமைய 'அனைவருக்கும் சுத்தமான குடிநீர்' எனும் கருப்பொருளின் கீழ் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 'பிரஜா ஜல அபிமானி' குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (30.10.2021) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. சனத் நிஷாந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்

மேலும் இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி. ஸ்ரென்லி டிமெல் நானாட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர், மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த ராஜா இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர் அச்சங்குளம் ஆலயத்தின் பங்குத்தந்தை உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

அச்சங்குளம் கிராமத்தில்  குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ