வரம்புகளில் பயிர்ச் செய்கை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாட்டின் உணவுப் பாதுகாப்பு உற்பத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக விவசாயக்காணிகளின் எல்லை வரம்புகளில் உப உணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று அம்பாறை மாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நெல் விவசாயத்தைதுறையில் முக்கிய மாவட்டமாகத்திகழும் அம்பாறை மாவட்டத்தின் விவசாயக் கண்டங்களிலுள்ள வயற்காணிகளின் வரம்புகளிலேயே இந்த உப உணவு உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்பொழுது பெரும்போக நெல் விதைப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் விவசாயத் திணைக்களம் குறித்த வயல் வரம்புகளில் பயிர்ச் செய்கைத் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் ஓர் அங்கமாக வரம்புகளில் குறுகிய கால பயிர்ச்செய்கை திட்டத்திற்கான பயிர் விதைகளை வழங்கி, நடுகையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஒன்று, சம்மாந்துறை மல்கம்பிட்டிவட்டை, உடங்காவட்டை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அஸ்லம் உட்பட கமக்கார பிரதி நிதிகள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசாயிகளுக்குப் பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நடுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வரம்புகளில் பயிர்ச் செய்கை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY