வாகன விபத்தில் இருவர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் திங்கட்கிழமை இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ-9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட் கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்தில் மதுப் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று முன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்னர்.

வாகன விபத்தில் இருவர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்