பாடசாலைகளுக்கு நாளை புதன்கிழமை விடுமுறை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு நாளை புதன்கிழமை விடுமுறை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்