தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டுப் பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. இதனொரு கட்டமாக, வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் மரக்கன்றுகளை வழங்கிவைத்து அப்பகுதிகளில் மரநடுகையையும் ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாண சபை கார்த்திகை மாதத்தை 2014ஆம் ஆண்டு வட மாகாண மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தியது. இதையடுத்து ஆண்டுதோறும் இந்த மாதத்தில் தமிழ் மக்கள் மரநடுகையை உணர்வுபூர்வமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்