"சுகம் பேணும் நிலையம்" | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
"சுகம் பேணும் நிலையம்" | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" கிளை வைத்தியசாலையானது, வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை சமூகம் ஆகியன இணைந்து இந்த வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தனர்.

மூளாய் - கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் செயலாளர் க.செல்வராசா, மூ.கூ.வை. பொருளாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, வைத்திய அத்தியட்சகர், வைத்திய கலாநிதி கே.சுரேந்திரகுமாரன், வைத்தியர் பி.சிறீகிருஷ்ணா, வைத்தியர் றஜனி, வைத்திய நிபுணர் வீரசுதன், வைத்தியர் பி.யசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வைத்தியசாலையின் இலவச வைத்திய சேவைகளான நீரிழிவு பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

தினமும் காலை 7 மணி தொடக்கம் காலை 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணி வரை, வைத்திய நிபுணர்கள் பலர் இணைந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் சேவைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"சுகம் பேணும் நிலையம்" | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்