கொரொனா தொற்றலும் மரணமும் (05.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குகின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பெண்கள் 09 பேர் உட்பட மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 1 ஆணும் 1 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 05 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரொனா தொற்றலும் மரணமும் (05.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்