ஆளுநரின் உறுதிமொழியை சுகாதாரத் தொண்டர்கள் நம்பினர்.      போராட்டப் பந்தலை அகற்றினர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சுமார் 8 மாதங்களுக்கு மேலாக நிரந்தர நியமனம் கேட்டுப் போராடி வந்த சுகாதாரத் தொண்டர்களின் போராட்டப் பந்தல் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து நேற்று வியாழக்கிமைமாலை அகற்றப்பட்டது.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் தகரப் பந்தல் அமைத்து இரவு பகலாக போராடி வந்தனர்.

இந்நிலையில் தமது நிலைமையை அறிந்து எம்முடன் கலந்துரையாடி எமது பிரச்னைகளை தீர்ப்பதாக ஆளுநர் உறுதி அளித்ததன் காரணமாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த தகரப்பந்தல் அகற்றப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆளுநரின் உறுதிமொழியை சுகாதாரத் தொண்டர்கள் நம்பினர்.      போராட்டப் பந்தலை அகற்றினர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்