யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவருக்கு வசதிகள் வழங்க அனுமதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிடுவதற்கும் இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் உரையாடுவதற்கும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01) அனுமதி வழங்கினர்.

கடந்த 14ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் 01) எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி லோ.குகதாசன் ஆஜராகியிருந்தார். அவரின் சமர்ப்பணத்தை ஏற்ற நீதவான் இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை பார்வையிடுவதற்கும், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும், உடுபிடவைகள் வழங்குவதற்கும் நீதிவான் அனுமதி வழங்கினார்.

யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவருக்கு வசதிகள் வழங்க அனுமதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்