மன்னாரில் ஒக்டோபர் மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் 31.10.2021 அன்று பதினைந்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதனால் ஒக்டோபர் மாதம் மன்னாரில் கொரோனா தொற்றாளர்கள் 273 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பாக நாளாந்தம் வெளியிடும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

2021.10.31 ந் திகதி மன்னாரில் 15 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தலா 06 நபர்களும், அடம்பன் மாவட்ட வைத்தியசாலையில் 02 நபர்களும், விடத்தல்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருமே இத் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டதாக பதிவாகியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட 29,393 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒக்டோபர் மாதம் 431 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டத்தில் ஒக்டோபர் மாதம் முழுதும் 273 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும், ஆரம்பம் முதல் ஒக்டோபர் மாதம் வரைக்கும் கொரோனா முதலாவது தடுப்பூசி 80,835 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 73,917 நபர்களுக்கும். குறிப்பிட்ட வயதுடைய மாணவர்களுக்கு 3476 மாணவர்களுக்கும் பாடசாலை செல்லாத குறிப்பிட்ட வயதுடையோருக்கு 523 பேருக்கும் இவ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்துள்ளமை குறிப்பிட்த்தக்கதாகும்.

மன்னாரில் ஒக்டோபர் மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ