புதிய தலைவராக பைஸர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
புதிய தலைவராக பைஸர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யூ.எல்.எம்.பைஸர்

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புதிய தலைவராக, நிந்தவூர் பிரதம தபாலதிபர் யூ.எல்.எம்.பைஸர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் 14 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் இடம்பெற்ற நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவின் போது இத்தெரிவு இடம்பெற்றது.

இதுவரை சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்த தபாலதிபர் பைஸர் அஞ்சல் திணைக்கள சேவையில் முப்பது வருட காலமாக நிறப்புற சேவையாற்றி வருவதுடன், முதலாம் தர தபாலதிபருமாவார்.

கிழக்கு நட்புறவு ஒன்றுயத்தின் முன்னாள் தவிசாளரான இவர், அம்பறை மாவட்ட அரச சேவை சுயாதீன தொழிற்சங்க சம்மேளன செயலாளராகவும், காரைதீவு மத்தியஸ்த சபையின் பிரதி தசிவாளராகவும் இருந்து வருகின்றார்.
தொழிற்சங்க சேவையில் 24 வருட அனுபவம் மிக்க இவர் தமிழ், சிங்களமொழி பெயர்ப்பாளராகவும் திகழ்கின்றார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் எனும் பெயரில் இத்தொழில் சங்கத்தை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு வகித்த புதிய தலைவர் பைஸர் இத்தொழிற் சங்கத்தைக்கட்டி வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்க்கது.

அவரை சங்கத்தின் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்துள்ள மையைப் பலரும் வரவேற்றுள்ளதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

புதிய தலைவராக பைஸர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்