சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலத்தின் முன்பாக திரண்ட சுகாதார தொண்டர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

நேற்றைய (05) தினம் முற்பகல் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகம் முன்பாக ஒன்று கூடிய சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நீண்ட நாள்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்ளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்துள்ளார் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியாயமான முறையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்