சீரில்லா காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் நிலையில் மழையுடன் கூடிய காலநிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊற்காவற்துறை,
தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்.

அனர்த்த பாதிக்கப்புக்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சீரில்லா காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்