குற்றச் செயல்களை தடுக்க சமூக காவல் நிலையங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும்விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநரின் பத்திரிகை செயலாளர் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பிரஜா காவல் துறையினர் என்ற பெயரில் செயல்படவுள்ள இந்தத் திட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இந்தத் திட்டம் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களை தடுக்க சமூக காவல் நிலையங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்