கடலோடு காவியமான ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவுதினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
கடலோடு காவியமான ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவுதினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடலோடு காவியமான ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை (17) காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை இன்பர்சிட்டி கடற்கரையில் அனுஸ்டிக்கப்பட்டது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் இன்பர்சிட்டி கடற்பகுதியில் 1999 ஆம் ஆண்டு இதே நாள் கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை இன்பசிட்டி கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயிரியல் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 22 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுவும் இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடலோடு காவியமான பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன், பாலகிருஸ்ணன் பிரதீபன் ஆகியோரினதும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கற்றுவந்த நிலையில் 17/05/2004 அன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம் குணரட்ணம் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.

கடலோடு காவியமான ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவுதினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்