இளம் பெண் கடத்தியவர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஹயஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் பணிபுரியும் இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டு இளம் பெண்ணைக் கடத்திச் சென்றனர் என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் கடத்தியவர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்