இலங்கையில் கோவிட் தொற்றும், மரணமும் அப்டேற் (07.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்று (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கோவிட் தொற்றும், மரணமும் அப்டேற் (07.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்