புரட்சினி (நீ) என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடந்த ஓரிரு வருடங்களாக நாட்டில் நிலவி வந்த கொரோனா மற்றும் தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியிலும் மன்னார் மாவட்டத்தில் கலைக்கு பெயர்போன கிராமங்களில் ஒன்றாக விளங்கும் பேசாலை பகுதியில் கலை, கல்வி, விளையாட்டு மற்றும் எழுத்துத் துறைகளில் சாதனை படைக்கும் இளைஞர் யுவதிகளை பேசாலை 'விழிகள் கலா முற்றம்' என்ற அமைப்பு ஊக்குவித்து அவர்களை கௌரவித்தும் வருகின்றது.

இந்த வகையில் பேசாலையைச் சேர்ந்த செல்வி மாக்கஸ் டிவைன்சியினால் ஆக்கம் செய்யப்பட்ட புரட்சினி (நீ) என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (28.05.2022) பேசாலையில் இடம்பெற்றது.

விழிகள் கலா முற்றம் அமைப்பின் இயக்குனர் தேசிய கலைஞர் 'சாஹித்யா' எஸ்.ஏ. உதயன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ. ஸ்ரான்லி டீமெல், சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், வட மாகாணம் நீர் வழங்கல் திட்ட பொறியியலாளர் எம். பிரேமானந் கூஞ்ஞ, திருகோணமலை சென். யோசேப் கல்லூரி அதிபர் அருட்பணிஏ. விஜய கமலன் அல்பிரட் (ஓ.எம்.ஐ) அடிகளார், மகரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலை வைத்திய கலாநிதி நிஷாந்தி பக்தகுணநாதன், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மன்னார் கிளை முகாமையாளர் ஜே. நிர்மலன் பெர்னாண்டோ, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எஸ். ரூபகுமார், பிரான்ஸ் தொழிலதிபர் பி. பிறட்றிக் குலாஸ், பேசாலை முன்னாள் பனை, தெங்கு வள விரிவாக்க அலுவலர் எஸ். இளங்கோ ஜோன் தீனு அகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புரட்சினி (நீ) என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY