காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனை, இஸ்லாமபாத் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (29) காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிந்தவூரை சேர்ந்த குறித்த 16 வயதுச் சிறுமி ஏற்கனவே சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்படி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவ தினமான ஞாயிறன்று மதிய உணவு உட்கொண்டு விட்டு, பாடசாலை வளாகத்தில் நின்றிருந்த இச்சிறுமி பிற்பகல் 2.30 மணிக்குப் பின்னர் திடீரென காணாமல் போயிருப்பதாக பாடசாலை நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீரின் வழிகாட்டலில் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY