446 மாணவர்கள் சித்தியினால் வெற்றிமேல் வெற்றியீட்டும் கல்முனை கல்வி வலய மாணவர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
446 மாணவர்கள் சித்தியினால் வெற்றிமேல் வெற்றியீட்டும் கல்முனை கல்வி வலய மாணவர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

செல்லத்துரை புவனேந்திரன்

அண்மையில் வெளியான 2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து வெட்டுப் புள்ளிக்கு மேல் 446 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் என்று கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு இப் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில் 377 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்தனர். இந் நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் 446 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தி அடைந்த மாணவர்களின் விபரங்கள் கல்விக்கோட்டம் அடிப்படையில்;

  • கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் 149 மாணவர்களும்
  • கல்முனை தமிழ் கல்விக் கோட்டத்தில் 115மாணவர்களும்
  • சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் 83மாணவர்களும்
  • நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் 59 மாணவர்களும்
  • காரைதீவு கல்விக் கோட்டத்தில் 40 மாணவர்களும்

சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை கல்வி வலயத்திலுள் கல்விக் கோட்டங்களில்;

  • கல்முனை தமிழ் கல்விக் கோட்டம் 21.34 வீதமும்
  • கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டம் 16.74 வீதமும்
  • காரைதீவு கல்விக் கோட்டம் 13.79 வீதமும்
  • சாய்ந்தமருது கல்விக் கோட்டம் 13.15 வீதமும்
  • நிந்தவூர் கல்விக் கோட்டம் 11.01 வீதமும் பெற்றுள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்கான பரீட்சைப் பெறுபேற்றுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு 69 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்து எமது கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வகையில், மாணவர்கள், அவர்களின் பெற்றோர், கல்வி புகட்டிய ஆசிரியர்கள், வழிப்படுத்திய அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் குறிப்பிட்டார்.

446 மாணவர்கள் சித்தியினால் வெற்றிமேல் வெற்றியீட்டும் கல்முனை கல்வி வலய மாணவர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல். எம். சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House