முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக எஸ்.குணபாலன் இடமாற்றம். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக எஸ்.குணபாலன் இடமாற்றம். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ். குணபாலன்

நான்கு வருடங்களாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ். குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரச அதிபராக இடம்மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இம் மாவட்ட செயலகத்தில் இரு அரசாங்க அதிபரின் கடமை காலங்களில் நான்கு வருடங்கள் கடமைபுரிந்து வந்த எஸ். குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (03.03.2022) முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக கடமையேற்றுள்ள இவர், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையேற்பதற்கு முன் துணுக்காய் மற்றும் ஒட்டுச்சுட்டான் பிரதேசங்களின் பிரதேச செயலாளராக கடமை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் மன்னார் மாவட்டத்தில் கடமைபுரிந்த காலங்களில் கொரோனா காலப்பகுதிகளிலும் மன்னாரில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட இக்கட்டான காலங்களில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக எஸ்.குணபாலன் இடமாற்றம். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House