மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓருமித்த குரல் வெற்றிகண்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலைகள் நிர்மானம் மற்றும் கனியவள மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் மன்னார் தீவுக்கு பெரும் அபாயம் தோன்றி வருவதுடன், இவ் வாழ் மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புகளுக்கு உருவாகி வருவதை கவனத்தில் எடுக்கப்பட்ட நிலையில், அன்மைகாலமாக இப்பகுதி மக்களால் இவற்றை நிறுத்தக்கோரி எதிர்வலைகளும், கவனயீர்ப்பு போரட்டங்களும் மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றன.

இதையிட்டு மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புக்களும் இணைந்து மன்னார் தீவில் அவுஸ்ரேலிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன் மலேசியாவைச் சார்ந்தவரான சாளிய என்பவரின் தலைமையில் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வுக்கான பரிசோதனையை மேற்கொள்ள எடுத்துவரும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டம் ஒன்று மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டமானது வெள்ளிக்கிழமை (04.03.2022) காலை நடைபெற்றபோது, கனியவள மணல் தொடர்பாக ஈடுபட்டுவரும் மலேசியாவைச் சார்ந்தவரான சாளிய தலைமையிலான குழுவினர் மன்னார் பிரஜைகள் குழுவினர் மன்னார் பகுதியிலுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட புத்திஜீவிகள் என பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னாரில் நிர்மானிக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மற்றும் கனியவள மணல் அகழ்வு காரணமாக உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக எக்காரணம் கொண்டும் மணல் அகழ்வுக்கு வழி சமைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக் கனியவள மணல் ஆய்வு செய்யும் இதில் கலந்து கொண்ட நிறுவன அதிகாரியும் தாங்கள் மக்களின் ஆதரவு இல்லாமல் இவ்வாறான செயல்பாட்டில் ஈடுபட மாட்டோம் என இங்கு தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓருமித்த குரல் வெற்றிகண்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House