தமிழ் இனத்திற்குரிய அரசியல் தீர்விற்கே முதன்மை அளிக்க வேண்டும் - குகதாஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களுக்கான தடைகளை நீக்கி நல்லெண்ண வெளிப்பாட்டின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்து அதனை உறுதி செய்வதன் மூலமே ஆரோக்கியமான முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் விடுத்திருக்கும் செய்தியில்;

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக முதலீடுகளை வரவழைப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் இதனை யாரும் எதிர்க்கப்போதில்லை.

ஆனால் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன்னர் அவர்களுக்கான தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைகளை நீக்கி நல்லெண்ண சமிக்கையை மேற்கொள்ளாது முதலீடு செய்ய வாருங்கள் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

உண்மையிலே புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களுக்கான தடைகளை நீக்கி நல்லெண்ண வெளிப்பாட்டின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்து அதனை உறுதி செய்வதன் மூலமே ஆரோக்கியமான முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியும். இந்த பேரப்பலத்தை புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஒற்றுமையாக கையாள வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்திற்குரிய அரசியல் தீர்விற்கே முதன்மை அளிக்க வேண்டும் - குகதாஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House