சிறீதரன் கமக்கார அமைப்புக்களுடனான சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் சிறீதரன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கும், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அவற்றை குறைப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பிலும், உரப்பிரச்சினை தொடர்பிலும், உரமின்மை காரணமாக கடந்த போக செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் நடராஜா சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் பெரிய பரந்தன் வட்டார அமைப்பாளர் யதீஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சிறீதரன் கமக்கார அமைப்புக்களுடனான சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House