களை கட்டியுள்ள  வெள்ளரிப்பழ சீஸன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ளரிப்பழ சீஸன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த மாவட்டங்களில் தற்பொழுது இறைக்கும் கொடும் வெய்யிலின் உஷ்ண நிலமைகளைத் தவிர்ப்பதற்கு பொது மக்கள் வெள்ளரிப்பழங்களை உண்டுவருகின்றனர்.

தாக சாந்திக்கென வெள்ளரிப்பழ விற்பனையும் தற்பொழுது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் களை கட்டிவருகின்றது.

தற்போதய உஷ்ணகாலத்தை இலக்காக வைத்து மேட்டு நிலப் பயிர்ச்செய்கையான வெள்ளரியைப் பயிரிட்ட விவசாயிகள் தற்சமயம் வெள்ளரிப்பழ அறுவடையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக வெள்ளரிப்பழ செய்கைக்குப் பெயர் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, செட்டிபாளையம், தேத்தாத் தீவு, மாங்காடு, பட்டிருப்பு, எருவில் போன்ற பிரதேசங்களிலிருந்து வெள்ளரிப்பழங்கள் எடுத்துவரப்பட்டு விற்பனையாகிவருகின்றன.

தினமும் மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் வெள்ளரிப்பழங்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்து நாளாந்த வருமானம் பெறுவதிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறு வெள்ளரிப்பழ வியாபாரம் களை கட்டியிருப்பதுடன், பொது மக்களும் இப்பழங்களை வாங்கி தாக சாந்திக்காகப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

ஒரு வெள்ளரிப்பழம் 300 ரூபா வரையிலும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

களை கட்டியுள்ள  வெள்ளரிப்பழ சீஸன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House