அனைவருக்கும் இனிமையான பயணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

"அனைவருக்கும் இனிமையான பயணம்" எனும் தொனிப்பொருளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்ரிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமானது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ். மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பஸ்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ் மத்திய பஸ் நிலைய முகாமையாளர், மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

அனைவருக்கும் இனிமையான பயணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House