விண்ணப்பம் கோரல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இம்முறை ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள தகுதியான மாணவிகள் இம்மாதம் 01ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, இதே காலப்பகுதியில் இக்காரியாலயத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம் கோரல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY