மடுமாதா கோவில் ஆடி விழா கொடியேற்றம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எதிர்வரும் ஆடி மாதம் இரண்டாம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரை ஸ்தலமாக விளங்கும் திருப்பதி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (23.06.2022) மடுத் திருப்பதியில் கொடியேற்றம் நடைபெற்றது.

வியாழக்கிழமை (23) ஆகிய இன்றைய தினம் மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளார் பாப்பரசரின் கொடியை ஏற்றிவைத்தார்.

மடுத்திருப்பதி பரிபாலகர் அருட்பணி பெப்சி சோசை அடிகளார் மடு அன்னையின் கொடியை ஏற்றிவைத்து இத்திருவிழாவை முன்னிட்டு ஆய்த்த நாட்களை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒன்பது நாட்களும் இத்திருத்தலத்தில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு மாலையில் நவ நாட்கள் இடம்பெறும்.

இதைத்தொடர்ந்து ஆடி மாதம் 2ஆம் திகதி மடு அன்னையின் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

மடுமாதா கோவில் ஆடி விழா கொடியேற்றம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY