பீரிஸின் உருவ பொம்மையை எரித்து இடம்பெற்ற போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணத்தில், வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் உருவ பொம்மையை எரித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரக அலுவலகம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராக நல்லூர் - கைலாச பிள்ளையார் கோவில் அருகில் இன்று சிவில் அமைப்புக்கள் போராட்டம் ஒன்றை நடத்தின.

கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை வந்தடைந்தனர்.

இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்த கருத்துக்களை கண்டித்த அவர்கள், எதிர் கோஷங்களை எழுப்பினர் அத்துடன், அவரின் உருவ பொம்மையையும் தீயிட்டு எரித்தனர்.

போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றையும் ஐ. நா. அலுவலகத்தில் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பீரிஸின் உருவ பொம்மையை எரித்து இடம்பெற்ற போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY