சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முதல் வித்தான பொன். சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) உரும்பிராயிலுள்ள அவரின் உருவச் சிலை அருகே இடம்பெற்றது.

வலி. கிழக்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.

நேற்று முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில், ஈகைச்சுடரை பொன். சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் மலர் மாலைகளை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன். சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயல்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வருடாந்தம் பொன். சிவகுமாரனின் நினைவேந்தலை வலி. கிழக்கு பிரதேச சபை மேற்கொள்வது என்று முன்தாக தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்கமையவே இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY