சிறுபோக விவாசாயிகளின் அவலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மண்ணெண்ணை இன்மையால் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காயச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் விவாசாயிகள் பலரும் திண்டாடுகின்றனர்.

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் செம்பியன்பற்று, அம்பன், குடத்தனை ஆகிய கிராமங்களில் நெல் அறுவடைக்குப் பின்னர் பெருந்தொகையான நிலப்பரப்பில் புலோலி, கரவெட்டி, அல்வாய் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வது வழக்கம். இச்சிறுபோக வெங்காய செய்கையில் அதிக விளைச்சல் கிடைத்து விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்து வந்துள்ளார்கள்.

இப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காய செய்கைக்காக விவசாயிகள் விளைநிலங்களைப் பண்படுத்தி வெங்காய நடுகையில் ஈடுபடுவதற்காக தயாராக இருந்து வருகின்ற போதிலும் நடுகை செய்யப்படும் வெங்காயப் பயிருக்கு தண்ணீர் இறைக்க போதிய மண்ணெண்ணையை எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். எனினும் இரண்டு மாதங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மண்ணெண்ணை வராமையினால் வெங்காயத்தை பயிரிடாமல் காத்திருக்கின்றனர்.

சிறுபோக விவாசாயிகளின் அவலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY