எழுதப்படாத கவிதைகள் நூல் வெளியீடு! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பௌர்ணமி கலை இலக்கியத் தொடரின் 42 ஆவது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்திய மண்டூர் அசோகாவின் 'எழுதப்படாத கவிதைகள்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

எழுத்தாளரும், கோறளை மேற்குப் பிரதேச செயலாளருமான வெ. தவராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ. யோகராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி. றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கான சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நூல் தொடர்பான மதிப்பீட்டுரையை எழுத்தாளர் உமா வரதராஜனும், வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலினும், ஏற்புரையை நூலாசிரியை மண்டூர் அசோகாவும் நிகழ்த்தினர். இந்நிகழ்வுகளை கவிஞர் ஜி. எழில்வண்ணன் தொகுத்து வழங்கினார்.

எழுதப்படாத கவிதைகள் நூல் வெளியீடு! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY