தனுஷ்கோடியில்  காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பும், மீனவர் விடுதலைகும் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தனுஷ்கோடியில் கடலில் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி AITUC மீனவ தொழிற்சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம், ஏராளமானோர் பங்கேற்பு.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைக்க மத்தி, மாநில அரசுகள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைத்தால் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னர் வளைகுடா கடல் பகுதியாக உள்ளதால் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசுவை, கடல் குதிரை உயிரிழக்கக்கூடும் என்பதால் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிடவும், அந்தத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்று கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களையும் விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் உள்ள கடலில் இறங்கி AlTUC மீனவ தொழில் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் AlTUC நிர்வாகி மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனுஷ்கோடியில்  காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பும், மீனவர் விடுதலைகும் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY