எரிபொருளுக்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை - அரசாங்க அதிபர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை பெறுவதற்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் வாகன இலக்கத்தின் அடிப்படையில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையில் சில கிராம சேவையாளர்கள் வாகன உரிம மாற்றம் பெறாதவர்களுக்கு பங்கீட்டு அட்டையை விநியோகிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போதைய சூழ்நிலையில் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு உரிமை மாற்றம் அவசியமானதாக கருதப்படவில்லை.

குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர் எரிபொருள் அட்டையை வழங்கும்போது தனது பிரிவில் உரிமை மாற்றம் பெறாதவர்களிடம் தற்காலிக உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று அவர்களுக்கு எரிபொருள் அட்டையை வழங்க முடியும் என்றார்.

எரிபொருளுக்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை - அரசாங்க அதிபர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY