எரிபொருளுக்காக வாடிநிற்பவருக்கு இராணுவத்தால் தண்ணீர் வினியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காகக் காத்திருப்போருக்குக் குடிதண்ணீர் வழங்கும் வகையில் இராணுவத்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதனூடாக மக்களுக்குத் தொடர்ந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

தற்போது கடுமையான வெய்யில் காலமாக இருப்பதால் வரிசையில் காத்திருப்பவர்கள் தாகத்துடனேயே அதிக நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரிசையில் காத்திருப்போருக்குக் குடிதண்ணீர் வழங்கும் வகையில் இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கியை வைத்துள்ளனர்.

எரிபொருளுக்காக வாடிநிற்பவருக்கு இராணுவத்தால் தண்ணீர் வினியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY