அமைதியான போராட்டத்தில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொழுற்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை கண்டனப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்‌ஷக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் ஸ்ரீதரன், மின்சார சேவைச் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் க.இளங்குமரன், நல்லூர் சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் கே.சரவணன், பருத்தித்துறை சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் ச. கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர்.

காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதிக்குள் இன்று நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருக்கும் கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டகாரர்களும் தாக்கப்பட்டனர். ஆகவே இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத்தில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY