10 சைக்கிள்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை 10 சைக்கிள்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. சைக்கிள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் காரை நலன்புரிச் சங்கத்தின் சார்பாக உபதலைவர் விநாசித்தம்பி நாகேந்திரம், செயலாளர் பரமநாதர் தவராஜா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் திரு கந்தசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

10 சைக்கிள்களையும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்கள் மருத்துவர்.எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, மருத்துவர் சி.ஜமுனானந்தா மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரும் பெற்றுக்கொண்டனர்.

பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினரிடம் டாக்டர் த.சத்தியமூர்த்தி விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய இந்தத் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

10 சைக்கிள்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)