பணிப்புறக்கணிப்பு முடிவுக்குக் கொணரப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் இ. போ. ச. சாலை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

கல்கமுவை இ. போ. ச. சாலை முகாமையாளர் மற்றும் 3 ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக இ.போ.ச யாழ். சாலை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ. போ. ச பேருந்தை வழிமறித்த குழுவொன்று, சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

கல்கமுவ சாலையிலிருந்து சென்ற சாலை முகாமையாளர் உள்ளிட்ட சுமார் 15 இ.போ.ச. பணியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். சாலைப் பதிவேட்டின்படி குறிப்பிட்ட குழுவினர் மரணவீடொன்றுக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மரணவீட்டில் மது அருந்திய பின்னர், இந்த தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக யாழ். சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 3 ஊழியர்களை கைது செய்ததாகவும், பணிப்புறக்கணிப்பை கைவிடுமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சாலை முகாமையாளர் கைது செய்யப்படும் வரை பணிப்புறக்கணிப்பை கைவிட மாட்டோம் என இ.போ.சவினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, நேற்று பகல் கல்கமுவ சாலை முகாமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால், பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக இ.போ.ச யாழ் சாலை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு முடிவுக்குக் கொணரப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY