கத்தியுடன் வந்த இளைஞர் அச்சுவேலியில் கைதானார்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அச்சுவேலியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கொலன் போத்தல் என்பன கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி - பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) சென்ற இளைஞர் வளவை துப்புரவு செய்துவிட்டு அதற்கான கூலியையும் வாங்கி சென்றுள்ளார்.

இதன்பின்னர் வீட்டிலிருந்த பெறுமதியான இரு கைபேசிகள் காணாமல் போயின என்று அந்த வீட்டின் பெண்மணி அயலவர்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் அந்த இளைஞர்மீது சந்தேகப் பார்வை விழுந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த இளைஞர் சாப்பாட்டு பார்சல் ஒன்றுடன் அந்த பெண்மணியின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை ஊரவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

அவரை விசாரித்தபோது, வீட்டில் தனியாக இருந்த பெண்மணி தனியாக இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக இருக்க வந்தார் என்றும் கைபேசிகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

அவரை ஊரவர்கள் பரிசோதித்தபோது அவரின் உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி, ஓடிக்கொலன் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த இளைஞர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கத்தியுடன் வந்த இளைஞர் அச்சுவேலியில் கைதானார்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY