அமைதியாக்க கொண்டாடப்பட்ட புனித ஹஜ்ஜுப்பெருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புனித ஹஜ்ஜுப்பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் நேற்று கொண்டாடினர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அப்துல் ஜப்பார் நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது அப்பிள் தோட்டத் திடலில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எம்.எஸ்.எம். ஸாதிக் நிகழ்த்தினார்.

பொருளாதார தடைகள், கஷ்டங்கள்,நெருக்கடிகள் நீங்கி, நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஓங்க துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் முஸ்லிங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தொழுகையில் ஈடுபட்டிருந்ததுடன், தொழுகை முடிந்தவுடன் தமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

மரணித்த உறவுகளுக்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் மையவாடிகளில் துஆ பிராத்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைதியாக்க கொண்டாடப்பட்ட புனித ஹஜ்ஜுப்பெருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)