வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியவரை விளக்கமறியலில் வைக்க மன்று அறிவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று அறிவித்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டதை தொடர்ந்து தொலைபேசியில் அவருடன் உரையாடிய நபர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட்டார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன், அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியவரை விளக்கமறியலில் வைக்க மன்று அறிவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House