வருடாந்த பொதுக்கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தென்கிழக்கு பல்கலைக்கழ சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 3ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.ஏ. அஹத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், நிதியாளர் சி.எம். மங்கள வன்னியராச்சி உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர் மற்றும் வேலைப் பொறியாளர் உள்ளிட்டோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பல்கலைக்கழத்தில் மிக நீண்ட காலம் வேலை அத்தியட்சகராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வுபெற்ற எம்.எம்.ஏ. சலீம், அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் அதிதிகள் மத்தியில் தனித்தனியான அறிமுகம் செய்து வரவேற்பளிக்கப்பட்டதோடு, நடப்பாண்டுக்கான தலைவராக சீ.எம்.ஏ. முனாஸ், செயலாளராக எம்.ஏ.சீ.எம். ஸிராஜ், பொருளாளராக ஏ.எம். ஜாபிர் உட்பட நிறைவேற்று நிர்வாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

வருடாந்த பொதுக்கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House