வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து  கடலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று முன்தினம் 27/01/ 2022 பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதியில் சோகம் நிலவிவருகிறது.

இவர்களோடு பலர் நேற்று பிற்பகல் கடலுக்கு சென்று திரும்பியிருந்த போதிலும், இருவர் மட்டும் இன்று காலை கரை திரும்பாததால் பிரதேசத்திலுள்ள மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் தேடுதல் நடத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் பயன்படுத்திய வலை வெட்டப்பட்டு துண்டங்களாக காணப்படுகின்ற போதும் அவர்கள் சென்ற படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் பாரிய படகுகளுடன் மோதுண்டு கடலில் மூழ்கடிக்கப் பட்டிருக்கலாமென பிரதேச மீனவர்களிடையே அச்சம் நிலவுகின்றது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன் என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்களை இன்று பல படகுகளில் சென்று தேடு்தல் நடாத்தியும் இதுவரை கண்டுபடிக்க படவில்லை.

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து  கடலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House