யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதையிட்டு கவலை தெரிவிக்கும் அர்ஜுன ரணதுங்க | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதையிட்டு கவலை தெரிவிக்கும் அர்ஜுன ரணதுங்க | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது என்று முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும்முகமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நல்லாட்சி அரசினால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.

வட பகுதியில் உள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென் பகுதிக்கு வந்து செல்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் தென்னிந்தியாவிற்கு சென்று வருவதற்கும் இந்த விமான நிலையம் திறந்து விடப்பட்டது.

அது வட பகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆனால், இந்த அரசாங்கம் அவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்க மறுத்து தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

எனினும், பொறுத்திருந்து பார்ப்போம். நான் தற்போது அரசியலில் இல்லை. அத்தோடு நான் அங்கம் வகித்த கட்சியிலிருந்து விலகி இருக்கின்றேன். எனினும், நான் நினைக்கின்றேன் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளார்கள். இந்த அரசாங்கம் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக செயல்படும் காலம் விரைவில் கைகூடும். அது விரைவில் இடம்பெறும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதையிட்டு கவலை தெரிவிக்கும் அர்ஜுன ரணதுங்க | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House