யாழ் அரசாங்க அதிபர் - இராணுவக் கட்டளைத் தளபதி சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் (காணி) மற்றும் உதவி மாவட்ட செயலர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் கொரோனா இடர் காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரச அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

யாழ் அரசாங்க அதிபர் - இராணுவக் கட்டளைத் தளபதி சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House