மூன்றாவது நாளாக காணாமல் போன மீனவர்களை தேடல் தொடர்கிறது. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த வியாழக்கிழமை (27) பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், ஆகிய இருவரும் இதுவரை கரை திரும்பாதபடியினால் இருவரையும் தேடும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இதுவரையும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்ககாத பட்சத்தில் உறவுகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றமும் அச்சமும் அதிகரிக்கின்றது.

இன்று காலை 10 மணியிலிருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி இடம் பெற்ற நிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

நேற்றைய தினம் குறித்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட சக மீனவர்கள் அவர்கள் தொழிலிற்கு பயன்படுத்திய வலைகள், துண்டு துண்டுளாகக் கிடப்பதைக் கண்டறிந்து அவற்றை கரைக்கு எடுத்து வந்தனர்.

மேலும், குறித்த மீனவர்கள் பாரிய இயந்திர படகில் மோதுண்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது நாளாக காணாமல் போன மீனவர்களை தேடல் தொடர்கிறது. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House