மக்களை சாப்பாட்டிற்காக வரிசையில் விட்டு சாதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மக்களை சாப்பாட்டிற்காக வரிசையில் விட்டு சாதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

மக்களை வரிசையில் நிற்க வைத்து சாதனை படைத்த பலன், இனிவரும் தேர்தலில் வெளிச்சத்திற்கு வருமென்று ஆட்சியாளருக்குத் தெரியாதா என்ன? என்று விசனம் தெரிவித்தார் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்.

அவர் மேலும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;
ஆட்சிக் காலத்தை நீடிப்பது என்பது, ஆளும் அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற ஆட்சியின் பிரதிபலிப்பும், அத்துடன், தாம் வெற்றி கொள்ளமுடியாதென்ற அச்சத்தின் அறிகுறியுமாகும்.

பாராளுமன்ற தேர்தலை கொரோனா அச்சத்தின் மத்தியில் நடாத்திய ஐனாதிபதி, தடுப்பூசிகளினாலும், இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளை அமூல்படுத்தியும் வெற்றிகரமாக கொரொனாப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த போதும், உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடையும் நிலையில் அதன் ஆயுட் காலத்தை நீடிக்கும் வர்த்தமானியை வெளியிட்டார் என்றால், அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்ததே.

தேர்தல் ஒன்றை எதிர் கொள்ள முடியாமல் 2024 ஆண்டு வரை ஒத்திவைத்து ஒத்தகை பார்க்கையிலே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவது போல மாகாணசபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்றங்களின் தேர்தல்கள் நடாத்தப்படாது ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை சர்வசன வாக்கெடுப்பு மூலம் கால நீடிப்புச் செய்கிறதென்பது மேலும் சந்தேகமற்ற அரசின் பலவீனத்தைப் பிரதிபலிக்கின்றது.

அன்று ஜே. ஆர். இன்று ஜீ. ஆர், என்று ஊகம் கூறினார், குகதாஸ்.

மக்களை சாப்பாட்டிற்காக வரிசையில் விட்டு சாதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House